உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில், கலைஞர் மகளிர் உதவித்தொகையை, ஒரு கோடியே, 40 லட்சம் மகளிருக்கு விரிவுப்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் தமிழ-கத்துக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து இருப்பதை கண்டித்து, நாளை (இன்று) காலை, 10:00 மணிக்கு கரூரில் தலைமை தபால் நிலையம் முன் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் தொண்டர்களுடன் பங்கேற்பது உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டது.கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் நன்னியூர் ராஜேந்திரன், மணிராஜ், விஜயகுமார், பரணி மணி, எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாம சுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர் கனகராஜ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை