உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் கம்பியின் மின்சாரம் பாய்ந்து நாய் பலி; விவசாயிக்கு படுகாயம்

மின் கம்பியின் மின்சாரம் பாய்ந்து நாய் பலி; விவசாயிக்கு படுகாயம்

குளித்தலை, டிச. 13-குளித்தலை அடுத்த, தொண்டமங்கிணம் பஞ்., சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன், 38, விவசாயி. இவர் வளர்த்த நாய் குறைத்துக் கொண்டே, விவசாய நிலத்தின் வரப்பில் ஓடியது. அப்போது அங்கிருந்த மின்சார கம்பியில் மோதி நாய் இறந்துள்ளது.பின்னால் வந்து கொண்டிருந்த பழனியப்பன் மீது, மின் கம்பியில் இருந்த மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விவசாய நிலத்தில், மின்சார கம்பியை அலட்சியமாக போட்டதால், தங்கராசு என்பவர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ