உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளப்பட்டியில் நாய் தொல்லை

பள்ளப்பட்டியில் நாய் தொல்லை

பள்ளப்பட்டியில்நாய் தொல்லைகரூர், செப். 29-பள்ளப்பட்டி பகுதியில், நாய் தொல்லை அதிகரித்துள்ளதால், வெளியில் நடமாட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.அரவக்குறிச்சி அருகில், பள்ளப்பட்டியில் உள்ள நங்காஞ்சி ஆற்று பாலத்திற்கு கீழ் பகுதியில் சாக்கடை கழிவு கூவம்போல் தேங்கி உள்ளது. இதுமட்டுமின்றி ஹோட்டல் கழிவுகள் உட்பட பல்வேறு இடங்களிலிருந்து சேகரமாகும் குப்பை கொட்டப்படுகிறது. இங்கு குவியும் கழிவுகளை உண்பதற்கு ஏராளமான தெரு நாய்கள் வருகின்றன. இவை, குப்பையை கிளறுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை, நாய்கள் விரட்டி செல்கின்றன. பகல் நேரங்களில், நாய்கள் தெருக்களில் கூட்டம் கூட்டமாக உலா வருவதால், மக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர்.நகராட்சி நிர்வாகம் சாக்கடை கழிவு, நங்காஞ்சி ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும், நாய்களை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை