உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் போதை பொருட்கள்; தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கரூரில் போதை பொருட்கள்; தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன், நான் போதை பழக்கத்துக்கு ஆளாகமாட்டேன் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை, முக்கிய தெருக்கள் வழியாக ஏந்தி சென்றனர். முன்னதாக போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை