கரூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தால்
பாதிப்பு இல்லை: பஸ்கள், லாரிகள் ஓடினகரூர், ஜூலை 10கரூர் மாவட்டத்தில், அகில இந்திய வேலை நிறுத்தத்தால் பாதிப்பு இல்லை. வழக்கம் போல பஸ்கள், லாரிகள் ஓடின.விவசாயிகளை ஒழிக்கும் வேளாண்மை சட்டங்களை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்தும், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.கரூர் மாவட்டத்தில், அகில இந்திய வேலை நிறுத்தம் காரணமாக, எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. அதே போல், கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில், வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.அதேபோல், தென்னிலை, க.பரமத்தி, வேலாயுதம்பாளையம், வாங்கல், வெள்ளியணை, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, கடவூர், தோகமலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சுற்று வட்டார பகுதிகளிலும், கடைகள் திறக்கப்பட்டிருந்தன. கரூரில் ஜவுளி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு நிறுவனங்கள், பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட்டன.