உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீப்பிடித்து முதியவர் பலி

தீப்பிடித்து முதியவர் பலி

கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளியணை பெருமாள்பட்டி காலனியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 77; இவர் கடந்த, 6 இரவு கொசுவர்த்தியை பற்ற வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஜெயச்சந்திரனின் உடையில் தீப்பிடித்தது. இதில், தீக்காயமடைந்த ஜெயச்சந்திரன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ