உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

கரூர் : அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தார்.கரூர் கருப்பம்பாளையம் ஏ.கே.பாரதி நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 77. இவர், செட்டிபாளையம் அமராவதி தடுப்பணை அருகில் உள்ள சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி