டூவீலர் மோதி மூதாட்டி பலி
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, குப்புச்சிபாளையத்தை சேர்ந்த கந்தசாமி மனைவி விஜயா, 68; இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அதே பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, மண்டபத்து பாறையை சேர்ந்த கூலித்தொழிலாளி அல்லிமுத்து, 37, என்பவர் ஓட்டிவந்த டூவீலர், விஜயா மீது மோதியது. இந்த விபத்தில் விஜயா படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு விஜயா உயிரிழந்தார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.