எஸ்.ஐ.ஆர்., பணிகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்
கரூர்:'' கரூர் மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., பணிகளை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேரடியாக கண்காணிக்க வேண்டும்,'' என, மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் தெரிவித்தார்.பீஹார் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - ஐக்-கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைய-டுத்து, நேற்று மாலை கரூர் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், பஸ் ஸ்டாண்ட் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.பிறகு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் நிருபர்களிடம் கூறியதா-வது:பீஹார் மாநிலத்தில், கருத்து கணிப்புகளை விட அதிகமான இடங்களில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அடுத்-தாண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள, சட்டசபை தேர்தலில் பீஹார் வெற்றி எதிரொலிக்கும். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தி.மு.க.,வினரின் மேற்பார்வையில் நடக்கிறது. விண்-ணப்பங்களை தி.மு.க., வினர்தான் கொண்டு வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் இறந்த வாக்காளர்கள், இடம் மாறிய வாக்காளர்கள் மற்றும் டபுள் என்ட்ரி வாக்காளர்களை நீக்க, தி.மு.க.,வினர் தடையாக உள்ளனர். இதுகுறித்து, கரூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுக்க உள்ளோம்.கரூர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொள்ளும் பணிகளை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், நேரடியாக கண்காணிக்க வேண்டும். அப்போதுதான், எஸ்.ஐ.ஆர்., பணிகள் நேர்மையாக நடக்கும். அரவக்குறிச்சி தொகுதியில், எஸ்.ஐ.ஆர்., பணிகள் சரியாக நடந்தால், 20 ஆயிரம் போலியான ஓட்டுகள் நீக்க வழி ஏற்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.மாவட்ட பா.ஜ., பொதுச்செயலர்கள் செல்வராஜ், சக்திவேல் முருகன் உடனிருந்தனர்.