உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எலக்ட்ரீஷியன் மயங்கி விழுந்து பலி

எலக்ட்ரீஷியன் மயங்கி விழுந்து பலி

குளித்தலை: கரூர் அடுத்த கடம்பன்குறிச்சி பெரிய பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 55; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில், கடந்த, 25 ஆண்டுகளாக எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, மணத்தட்டை பகுதியில் இயங்கி வரும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு, முத்துசாமி வேலைக்கு வந்தார். அப்போது, நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது மனைவி மணிமாலா, 53, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி