மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்
கரூர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் கிளை சார்பில், திட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், மின்வாரிய மேற்பார்வை தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.அதில், கேங்மேன் பணியாளர்களுக்கு, கள உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு உள் முகத்தேர்வில் வாய்ப்பு வழங்க வேண்டும். விடுப்பட்ட பணியாளர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில், மாநில செயலாளர் தனபால், கிளை சிராஜூதின், பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட சி.ஐ.டி.யு., துணைத் தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.