மேலும் செய்திகள்
பாசன கால்வாயில் துாய்மைப்பணி தீவிரம்
24-Sep-2025
கிருஷ்ணராயபுரம், புதுப்பட்டி புங்காற்று நெடுகை பகுதியில், ஆக்கிரமிப்பு மற்றும் முள் செடிகள் வளர்ச்சி காரணமாக மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதி யில், புங்காற்று நெடுகையில் சிறிய தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில், மழை காலங்களில் புங்காற்று நெடுகை வழியாக வரும் மழைநீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் மழை நீரால், விவசாய கிணறுகளில் நீர் மட்டம் கிடைக்கிறது. தற்போது புங்காற்று கரைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கரைகள் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும் நெடுகை பகுதி முழுவதும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், மழை நீர் முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, புங்காற்று நெடுகை பகுதியில் வளர்ந்து வரும் முள் செடிகளை வெட்டி அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24-Sep-2025