மேலும் செய்திகள்
வாழை இலை விலை உயர்வு
02-Oct-2024
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை
14-Oct-2024
கிருஷ்ணராயபுரம் பகுதியில்வெற்றிலை விலை வீழ்ச்சிகிருஷ்ணராயபுரம், அக். 25-கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வெற்றிலை வரத்து காரணமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகிளிப்பட்டி, சிந்தலவாடி ஆகிய இடங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். வெற்றிலை பறிக்கப்பட்டு லாலாப்பேட்டை வெற்றிலை கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் மழை பெய்ததால் வரத்து சரிந்தது. அப்போது வெற்றிலை விலை உயர்ந்தது. 100 கவுளி கொண்ட மூட்டை, 4,000 ரூபாய்க்கு விற்றது.நேற்று வரத்து அதிகரிப்பு காரணமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது. 100 கவுளி கொண்ட மூட்டை, 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இங்கிருந்து கரூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலுார், மேட்டுபாளையம் ஆகிய நகரங்களுக்கு வெற்றிலை அனுப்பப்படுகிறது.
02-Oct-2024
14-Oct-2024