உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தாழ்வான நிலையில் மின் கம்பிகள் சரி செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு

தாழ்வான நிலையில் மின் கம்பிகள் சரி செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு

கரூர், நவ. 20-கரூர் மாவட்டத்தில், விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும், மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது. நாள்தோறும் விவசாய நிலங்களில் விதைப்பு பணி, களை பறித்தல், நீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், விவசாய நிலங்களில் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வான நிலையில் உள்ளதால், விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளிகள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், விவசாய பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நுாற்றுக்கணக்கான விவசாய கூலி தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளில், நாள்தோறும் காற்றுடன் கூடிய, மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பல பகுதிகளில் விவசாய நிலங்கள் வழியாக, மின் கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கிறது. சில இடங்களில் கீழே விழுந்த மின் கம்பிகளை, உடனடியாக அகற்றுவது இல்லை.இதனால், உயிரழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, விவசாய நிலங்களில் தாழ்வான நிலையில் உள்ள, மின் கம்பிகளை அகற்ற வேண்டும். காற்று மற்றும் மழை காரணமாக, கீழே விழும் மின் கம்பிகளையும் உடனடியாக அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை