உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் விழுந்த தேக்கு மரத்தை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

வாய்க்காலில் விழுந்த தேக்கு மரத்தை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணராயபுரம், பிள்ளபாளையம், கட்டளை வாய்க்காலில் கடந்த வாரம் வீசிய சூறாவளி காற்றால், தேக்கு மரம் விழுந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் கடந்த வாரம், சூறாவளி காற்றுடன் பல இடங்களில் மழை பெய்தது. இதில் கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் கரைகளில் பழமையான தேக்கு மரம் உள்ளது.கடந்த வாரம் பலத்த சூறாவளி காற்று வீசியதால், கட்டளை வாய்க்கால் கரையில் இருந்த பழமையான தேக்கு மரம் விழுந்தது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது தடை ஏற்படுகிறது.எனவே பழமையான தேக்கு மரத்தை, வாய்க்காலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி