மேலும் செய்திகள்
இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்
30-Jun-2025
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவரின், 16 வயது மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். பிறகு, வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை, போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
30-Jun-2025