மேலும் செய்திகள்
நிதி நிறுவன அதிபர் வெட்டி படுகொலை
06-Aug-2025
மோகனுார்;நிதி நிறுவன அதிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட, தி.மு.க., முன்னாள் நிர்வாகி உள்பட, நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.நாமக்கல்-மோகனுார் சாலையில் உள்ள ஈச்சவாரி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ், 40; இவர், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஆக., 5ல், நாமக்கல்லில் இருந்து டூவீலரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, நான்கு பேர் கொண்ட கும்பல், அருள்தாசை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. மோகனுார் போலீசார் விசாரணையில், கொடுத்த கடனை திருப்பி தராததால், ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரும், நாமக்கல் மாவட்ட முன்னாள் தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளருமான கார்த்திக், 42, சேந்தமங்கலத்தை சேர்ந்த ரமேஷ்குமார், 40, சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த ராஜசேகரன், 27, நாமக்கல் தில்லை நகரை சேர்ந்த வீரக்குமார், 39, ராசிபுரம் கோனேரிப்பட்டியை சேர்ந்த டிரைவர் என்.கார்த்திக், 40 ஆகியோர், அருள்தாசை கொலை செய்தது தெரியவந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், கார்த்திக், ரமேஷ்குமார், வீரக்குமார், என்.கார்த்திக் ஆகியோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவிட்டார். தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
06-Aug-2025