உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புரட்டாசி விரதம் தொடக்கம் மாயனுாரில் மீன் விற்பனை டல்

புரட்டாசி விரதம் தொடக்கம் மாயனுாரில் மீன் விற்பனை டல்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் நடுவே கதவணை கட்டப்பட்டுள்ளது. கதவணை வழியாக காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், கதவணையில் சேமிக்கப்படும் நீரில், மீன்கள் வளர்க்கப்-படுகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் மீன்களை, உள்ளூர் மீன-வர்கள் பரிசலில் சென்று பிடித்து வந்து விற்பனை செய்கின்றனர்.தற்போது, புரட்டாசி விரதம் தொடங்கியுள்ளதால், மீன்கள் வாங்க வரும் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இதனால் மீன் விற்பனை மந்தமாக இருந்தது. ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 600 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் வழக்கமாக விடுமுறை நாட்களில், 500 கிலோ மீன் விற்பனையாகும், புரட்-டாசியால், 250 கிலோ வரை மட்டுமே மீன்கள் விற்பனையான-தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை