மேலும் செய்திகள்
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
02-Dec-2024
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்து கொண்டுவந்து கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது, சபரிமலை சீசன் காரணமாக, மீன் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. நேற்று காலை, ஜிலேபி மீன் கிலோ, 70 ரூபாய், கெண்டை மீன், 90 ரூபாய், விரால் மீன், 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று, 250 கிலோ மீன்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
02-Dec-2024