உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சீரான விலையில் பூ விற்பனை

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சீரான விலையில் பூ விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், தாளியாம்பட்டி, காட்டூர், செக்கணம், எழுதியாம்பட்டி, மாயனுார், சேங்கல், பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூக்கள் பறிக்கப்பட்டு கரூர், திருச்சி, முசிறி, குளித்தலை பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் விரிச்சிப்பூக்கள் கிலோ, 80 ரூபாய், சின்ன ரோஜா கிலோ, 90 ரூபாய், செண்டுமல்லி கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பூக்கள் சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை