உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காங்., பேச்சாளரை தாக்க முயன்ற மாஜி தி.மு.க., எம்.எல்.ஏ.,

காங்., பேச்சாளரை தாக்க முயன்ற மாஜி தி.மு.க., எம்.எல்.ஏ.,

குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கள்ளை கிராமத்தில் நேற்று முன்தினம் காலை, 8:00 மணியளவில் இண்டியா கூட்டணி சார்பில், பெரம்பலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அருண்நேரு பிரசாரம் செய்தார். அப்போது, கள்ளை பஞ்., தலைவர் கருப்பையா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது, காங்., பேச்சாளர் பொன்னம்பட்டி ராஜு, 'தங்கள் கட்சியினர் மதிப்பதில்லை, எப்படி நாங்கள் ஓட்டு கேட்க முடியும்' என, வேட்பாளரிடம் புகார் தெரிவித்தார்.அருகில் இருந்த மாஜி எம்.எல்.ஏ., ராமர், 'சால்வை போடுப்பா' பேசிக் கொள்ளலாம் என்றார்.அப்போது வேட்பாளர், 'அண்ணே கோவிச்சுக்காதீங்க, கோவிச்சுக்காதீங்க' என்று சொன்னார். அப்போது காங்., பேச்சாளர் 'சும்மா இருங்க, சும்மா இருங்க' என்றார். வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோர், பேச்சாளர் கன்னத்தில் கை வைத்து மன்னிப்பு கேட்டனர்.மீண்டும் பேச்சாளர் சும்மா இருங்கப்பா என கூற, அருகில் இருந்த வேட்பாளரின் உறவினரும், மாஜி எம்.எல்.ஏ.,வுமான ராமர், தோகமலை கிழக்கு ஒன்றிய செயலர் அண்ணாதுரை ஆகியோர், காங்., பேச்சாளரிடம் தகராறு செய்து, கையால் தாக்க முயன்றனர். மேலும் பேச்சாளரை விரட்டினர்.அந்த இடத்திலிருந்து காங்., பேச்சாளர் சங்கடத்துடன் வெளியேறி மொபட்டில் சென்றார். இது கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ