உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் நகராட்சி முன்னாள் தலைவர் மரணம்

கரூர் நகராட்சி முன்னாள் தலைவர் மரணம்

கரூர்:கரூர் நகராட்சியாக இருந்தபோது, தலைவராக இருந்த அ.தி.மு.க.,வை சேர்ந்த செல்வராஜ் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.கடந்த, 2011-16 வரை, அ.தி.மு.க., சார்பில் கரூர் நகராட்சி தலைவராக இருந்தவர் செல்வராஜ், 74; இவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று செல்வராஜ் உயிரிழந்தார். இவர், இனாம் கரூர் டவுன் பஞ்., தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இறந்த செல்வராஜ் உடலுக்கு, அ.தி.மு.க., உள்ளிட்ட, பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை