மேலும் செய்திகள்
வெள்ளி அன்ன வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா
23-May-2025
கரூர், கரூர் மாரியம்மன் கோவிலில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நிர்வாகி களுடன் சென்று நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா கடந்த, 11 முதல் நடந்து வருகிறது. நாள்தோறும் உற்சவர் அம்மன் திருவீதி உலா, தேரோட்டம், மாவிளக்கு ஊர்வலம், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு செல்லும் வைபவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.முன்னதாக, நேற்று காலை கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், கட்சி நிர்வாகிகளுடன் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அவரை, கோவில் நிர்வாகிகள் வரவேற்று, அழைத்து சென்றனர். பிறகு, சுவாமியை வழிபட்ட விஜயபாஸ்கருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
23-May-2025