உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்அரவக்குறிச்சி, நவ. 22-பள்ளப்பட்டி லயன்ஸ் சங்கத்தின், 29ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, இலவச கண் சிகிச்சை முகாம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து பள்ளப்பட்டியில் நடத்தியது. மதுரை அரவிந்த் மருத்துவமனையின், 21 பேர் கொண்ட மருத்துவ குழு பங்கேற்று, பார்வை குறைபாடு உள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில், 440 பேர் பங்கேற்றனர். 51 பேர் மேல் சிகிச்சைக்காக, மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.பள்ளப்பட்டி லயன்ஸ் சங்க பொருளாளர் தர்வேஷ்அலி, எவரெஸ்ட் அரபாத் அலி, முன்னாள் தலைவர் பாபு, பள்ளப்பட்டி லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை