உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

கரூர், கரூர், மாரியம்மன் கோவில் அருகில், திருவாடுதுறை ஆதீனம் மடத்தில், தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.அதன் தலைவர் சேஷாத்ரி முகாமை தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர், செவிலியர்கள் கண் பரிசோதனை செய்தனர். முகாமில், 150 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வெள்ளை எழுத்து, கண் புரை, சர்க்கரை நோய், கண் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கருவிழியில் புண், குழந்தைகளின் கண் நோய் தொடர்பான பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.முகாமில், செயலாளர் பரமசிவம், பொருளாளர் கோபால், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜஸ்ரீ ரமேஷ், சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை