உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்

சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கரூர், கரூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், நொய்யல் குறுக்கு சாலையில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. சின்னதாராபுரம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பரத் தலைமையில் சுகாதார செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் ஈஸ்வரி, ஜெகதீஸ்வரி கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். முதியவர்கள், பாலுாட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பொதுமக்கள் என அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த பரிசோதனை செய்தனர். காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி, கால் வலி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி