உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழிமலை ஆனந்த நடராஜ கோவிலில் பவுர்ணமி பூஜை

புகழிமலை ஆனந்த நடராஜ கோவிலில் பவுர்ணமி பூஜை

கரூர்: கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, வேலாயுதம்பாளையம் புகழிமலை ஆனந்த நடராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்-தினம் இரவு பூஜை நடந்தது. அதில், மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகை-யான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. ஏராள-மான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மூலவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை வரை, கோவிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி