உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சர்க்கரை ஆலை தொழிலாளி வீட்டில் தங்க நகை திருட்டு

சர்க்கரை ஆலை தொழிலாளி வீட்டில் தங்க நகை திருட்டு

கரூர்: கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகம்பாளையம் பகுதியை சேர்ந்த, கென்னடி மனைவி பிரியங்கா, 29; புகழூர் சர்க்கரை ஆலையில், தற்காலிக தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த, 9 ல் இரவு வீட்டை பூட்டி விட்டு, கரூருக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு திரும்பி சென்றபோது, கதவின் முன்பக்கம் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த, 13 பவுன் தங்க நகை மற்றும், 5,000 ரூபாயை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, பிரியங்கா அளித்த புகாரின்படி, வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ