அரசு பள்ளி மாணவர்கள் ஜூடோ போட்டியில் வெற்றி
அரசு பள்ளி மாணவர்கள்ஜூடோ போட்டியில் வெற்றிகிருஷ்ணராயபுரம், நவ. 30-லாலாப்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கரூரில் நடந்த ஜூடோ போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கரூரில் நடந்த ஜூடோ போட்டியில் கலந்து கொண்டு, 13 தங்க பதக்கம், 1 வெள்ளி பதக்கம், 6 வெண்கல பதக்கம் வென்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர். மாணவ, மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமார், உடற்கல்வி இயக்குனர் புத்தர், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துசாமி, கனகவள்ளி, ராஜ மாணிக்கம் மற்றும் ஜெ.பி., ஸ்போட்ஸ் அகாடமி பயிற்சி ஆசிரியர் சுசீந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.