உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லிங்கமநாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம்

லிங்கமநாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.தமிழ்நாட்டின், 12,480 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நேற்று ஒரே நாளில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதி-யாக, லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கிரா-மத்தில் புதிதாக சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் திட்டத்-திற்கு ஒப்புதல், தெரு விளக்குகள் பழுது பார்க்கும் பணி விரைவில் செய்ய கோருதல், குடிநீர் வசதி தேவை.கிராம மக்களுக்கு அரசு நலத்திட்டங்களை சேவை முகாம்கள் மூலம் வழங்க நடவடிக்கை, ஏழை குடும்பங்களுக்கு வீடு, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து உத-விகளையும் செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.கிராமசபை கூட்டத்தின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை