மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்
13-Apr-2025
குளித்தலை, மே 2குளித்தலை அடுத்த, வடசேரி, புத்துார் பஞ்சாயத்து பகுதிகளில், சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்துவதாக வந்த தகவல்படி, புத்துார் வி.ஏ.ஓ., அழகர், நங்கவரம் எஸ்.ஐ., மதியழகன் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, காவல்காரன்பட்டி - புத்துார் நெடுஞ்சாலையில், காயக்காரர்மேடு அருகே வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, லாரி டிரைவர் அங்கிருந்து தப்பினார். சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு யூனிட் கிராவல் மண் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து நங்கவரம் போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார் டிப்பர் லாரி உரிமையாளர், டிரைவர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
13-Apr-2025