மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
கரூர்: மதுரை மாவட்டம், அனுப்பனாடியை சேர்ந்தவர் ராமர் பாண்டி, 37. இவர் கடந்த பிப்., 19ல் கரூர் நீதிமன்றத்தில், கொலை வழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு, மதுரைக்கு டூவீலரில் சென்றார். அப்போது, ராமர் பாண்டியை காரில் பின் தொடர்ந்த மர்ம கும்பல், அரவக்குறிச்சி அருகே தேரப்பாடி பகுதியில் சென்றபோது, அரிவாளால் வெட்டி கொலை செய்தது.இந்த கொலை வழக்கு தொடர்பாக, அரவக்குறிச்சி போலீசார், வினோத் கண்ணன், 26, மகேஷ்குமார், 24, ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், கரூர் எஸ்.பி., பிரபாகரின் பரிந்துரையை ஏற்று, வினோத் கண்ணன், மகேஷ்குமார் ஆகியோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார்.இதையடுத்து, கோவை மத்திய சிறையில் உள்ள வினோத் கண்ணன், மகேஷ்குமார் ஆகியோரிடம், நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான நகலை, அரவக்குறிச்சி போலீசார் வழங்கினர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025