உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்தல் வாகனம் ஒப்படைப்பு

மணல் கடத்தல் வாகனம் ஒப்படைப்பு

கிருஷ்ணராயபுரம்: நந்தமேடு, காவிரி கரை அருகில் மணல் கடத்தி வந்த வேன் பறி-முதல் செய்யப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, ரெங்கநாதபுரம் வடக்கு நத்தமேடு காவிரி ஆற்றங்கரையில், நேற்று அதிகாலை நேரத்தில் கிருஷ்ண-ராயபுரம் தாசில்தார் மகேந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்-டனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா இன்ரா வேனில், காவிரி மணல் திருட்டுத்தனமாக எடுத்து வந்த டிரைவர், வரு-வாய்த்துறை அதிகாரிகளை பார்த்ததும், நடு வழியில் நிறுத்தி விட்டு தப்பினார்.இதுகுறித்து மாயனுார் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று டிரைவர் மூலம், மணல் கடத்தி வந்த டாடா வேன் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்-கப்பட்டது. அதில் ஒரு யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்-தது. மேலும், மணல் கடத்தல் குறித்து மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில், கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பிரபு, போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ