உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

கரூர்: கரூர், ஸ்ரீ பசுபதி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.பிரசித்தி பெற்ற கோவிலில் நேற்று காலை, சிறப்பு மூர்த்தி ேஹாமம், ஏகதின லட்சார்ச்சனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து, மூலவர் அனுமனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப்பட்டது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ பசுபதி ஆஞ்சநேயர் திருவீதி உலா நடந்தது.* கரூர் வெண்ணைமலை ஸ்ரீ ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அதில், மூலவர் அனுமன், வடை மாலையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். * கரூர், செய்யப்ப கவுண்டன்புதுார் ஸ்ரீ சஞ்சீவி பர்வத ஆஞ்சநேயர் கோவிலில், மூலவர் சிலைக்கு சிறப்பு அபிேஷகம், மஹா தீபாராதனை நடந்தது. பின், ஆஞ்சநேயர் பூக்கள், வடை மாலையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் அன்னதானம் வழங்கப்பட்டது.அதேபோல், கரூர் கற்பக விநாயகர் கோவிலில் உள்ள, ஆஞ்சநேயருக்கும், கரூர் பழைய ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர், மின்னாம்பள்ளி சின்மய ராமதுாத தியான மண்டப ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. * கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் ராம ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை, ஆஞ்சநேயருக்கு விசேஷ ஹோமம் நடந்தது. பின், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராம ஆஞ்சநேயருக்கு, 501 வடைமாலை சாத்தப்பட்டது. இரவு 7:15 மணிக்கு ராம ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். ஏற்பாடுகளை, கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் கிருஷ்ணமாச்சாரி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை