உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடும் பனிப்பொழிவு பொதுமக்கள் தவிப்பு

கடும் பனிப்பொழிவு பொதுமக்கள் தவிப்பு

கரூர், டிச. 22-கரூரில், கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.அக்., முதல் டிச., வரை, மூன்று மாதங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த கால கட்டத்தில் பெய்யும் மழைதான், மாவட்டத்தின் சராசரி மழையளவான, 652.20 மி.மீ., எட்ட உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த அக்., நவ., மாதங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை.டிசம்பரில் ஓரளவு மழை பெய்து வருகிறது. தற்போது அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு காணப்படுகிறது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகுதான் பனிப்பொழிவு இருக்கும்.பருவமழை சீசனிலேயே பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாலை 4:00 முதல் 8:00 மணி வரை பனி தாக்கம் காரணமாக பள்ளி மாணவ, மாணவியர், முதியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை