சிந்தலவாடியில் குப்பை தேக்கத்தால் கடும் அவதி
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, பழைய நெடுஞ்சாலையோரம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்-பட்ட வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, கரூர் - திருச்சி பழைய நெடுஞ்சாலை மேம்பாலம் பகுதியில் குப்பை கொட்டும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் பஞ்சாயத்து துாய்மை பணியா-ளர்கள் மூலம் கொண்டு வந்து குப்பை கொட்டப்படுகிறது. தற்-போது பிலாறு வாய்க்கால் அருகில் உள்ள, சாலையோர இடங்க-ளிலும் கொட்டப்படுவதால் குப்பை தேங்கி வருகிறது. எனவே, பிலாறு வாய்க்கால் அருகில் உள்ள இடங்களில் குப்பை கொட்-டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.