உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் வழிப்பறி திருட்டு: இருவர் கைது

சாலையில் வழிப்பறி திருட்டு: இருவர் கைது

கரூர் : டூவீலரில் சென்றவரை மறித்து பணம், மொபைல் போனை வழிப்பறி செய்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வரவணை அருகே உள்ள சுண்டுகுழி பட்டியை சேர்ந்தவர் அர்ஜுனன், 52. தான்தோன்றிமலையில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். கரூர் அருகில், ஏமூர் புதுார் பஸ் ஸ்டாப்பில், பின் தொடர்ந்து வந்த காரைக்குடி வேப்பன்குளத்தை சேர்ந்த சங்கரலிங்கம், 28, கரூர் முத்துலாடம்பட்டி தென்னரசு, 23, ஆகியோர் அர்ஜுனன் வாகனத்தை இடைமறித்து, அவரிடம் இருந்த மொபைல் போன், 2,000 ரூபாய் ஆகியவற்றை வழிப்பறி செய்து தப்பி ஓடினர்.அர்ஜூனன் அளித்த புகார்படி, சங்கரலிங்கம், தென்னரசுவை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை