உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் மா.திறனாளிகள் 45 பேருக்கு அடையாள அட்டை

குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் மா.திறனாளிகள் 45 பேருக்கு அடையாள அட்டை

குளித்தலை, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, வாரந்தோறும் புதன்கிழமை, பழைய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், கை, கால் இயக்க குறைபாடு, தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்குவாதம், குள்ளத்தன்மை, அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், பார்வையின்மை, குறை பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, பேச்சு, மொழித்திறன் குறைபாடு, ரத்த சோகை, ரத்த அழிவு சோகை, ரத்தம் உறையாமை ஆகிய மாற்றுத்திறன் வகைகளுக்கும்.வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, அறிவுசார் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, புறவுலக சிந்தனை அற்றோர், மனநோய், நாள்பட்ட நரம்பியல் பதிப்பு, திசு பன்முக கடினமாதல், நடுக்கு வாதம், பல்வகை குறைபாடு ஆகிய மாற்றுத்திறன் வகைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு திங்கட்கிழமை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும்; மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில், மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவ., மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமையான, நேற்று காலை, 11:00 மணிக்கு, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடந்த முகாமில், 45 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.அரசு எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர்கள் திவாகர், தினேஷ், மனநல மருத்துவர் லாவண்யா, கண் மருத்துவர் சுரேந்தர் ஆகியோர் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்கினர். இதில், மருத்துவர் சான்றின் அடிப்படையில், 45 மாற்றுத்திறனாளிகளுக்கு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்ட அடையாள அட்டைகள் உடனடியாக வழங்கப்பட்டன.இதில், தமிழ்நாடு உரிமைகள் திட்ட அலுவலர்கள் சுப்பையன், ரஞ்சனி மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் பணிபுரியும் சமுதாய மறுவாழ்வு பணியாளர்கள், சமுதாய வழி நடத்துனர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை சிகிச்சையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ