உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் ஆகாயத்தாமரை தண்ணீர் செல்வதில் பாதிப்பு

வாய்க்காலில் ஆகாயத்தாமரை தண்ணீர் செல்வதில் பாதிப்பு

கிருஷ்ணராயபுரம், மஞ்சமேடு வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருவதால் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த மஞ்சமேடு வழியாக, திருக்காம்புலியூர் பகுதியில் இருந்து மேட்டு மகாதானபுரம், நந்தன்கோட்டை வழியாக கிளை பாசன வாய்க்கால் செல்கிறது. இங்குள்ள விவசாயிகள் வாழை, வெற்றிலை, நெல் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது கிளை பாசன வாய்க்காலில், மஞ்சமேடு பகுதியில் கழிவுநீர் காரணமாக அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் பாசன வாய்க்காலில் குறைந்த தண்ணீர் மட்டுமே செல்கிறது. எனவே, வாய்க்காலில் கழிவுநீர் செல்லாமல் தடுத்து, ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !