உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் பெண் பயணி திட்டியதால் பஸ்சை இயக்காமல் டிரைவர் அடம்

கரூரில் பெண் பயணி திட்டியதால் பஸ்சை இயக்காமல் டிரைவர் அடம்

கரூர்: கரூர் அருகே, பெண் பயணி திட்டியதால், டிரைவர் தொடர்ந்து பஸ்சை இயக்காமல், சாலை நடுவே நிறுத்தி அடம் பிடித்தார். இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, கல்லுப்பாளையம் பகுதிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதனால், பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், பஞ்சமாதேவி அருகே ஒரு பஸ் ஸ்டாப்பில், பஸ்சை டிரைவர் நிறுத்தவில்லை. இதனால், பெண் பயணி ஒருவர், டிரைவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பஸ்சை அப்படியே சாலையில் நிறுத்திவிட்டு, தொடர்ந்து இயக்காமல் டிரைவர் அடம் பிடித்தார்.இதனால், பயணிகளுக்கும், பஸ் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாக சென்ற மற்ற அரசு பஸ் டிரைவர்கள் சமாதானப்படுத்தியதால், டிரைவர் பஸ்சை மீண்டும் ஓட்டிச் சென்றார். இதனால் பயணிகள் சிறிதுநேரம் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை