உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் சோளம் சாகுபடி பரப்பு அதிகரிப்பு

கரூர் மாவட்டத்தில் சோளம் சாகுபடி பரப்பு அதிகரிப்பு

கரூர்: வறட்சியை தாங்கும் திறன் இருப்பதால், கரூர் மாவட்டத்தில் சோளம் சாகுபடி பரப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சிறு தானிய உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் வலுப்பெறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என, மருத்துவம் கூறுகிறது. தற்போது சிறு தானியங்களின் நுகர்வு அளவு அதிகரித்து வருகிறது. இதை சாதகமாக்கி, சிறு தானியங்களை விற்கும் கடைகளும் ஆங்காங்கே புதிது புதிதாக முளைக்கின்றன. சோளம், ராகி, கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி மற்றும் பனி வரகு ஆகியவை சிறுதானிய வகையில் இணைந்துள்ளன என்ற போதிலும், கரூர் மாவட்டத்தை பொருத்தவரை சோளம் மட்டுமே பிரதானமாக பயிரிடப்படுகிறது. மேலும், வறட்சியை தாங்கும் திறன் மற்றும் குறைந்த நீர்த்தேவை கொண்ட சோளம், விவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தணிப்பதில் மிக முக்கிய பங்கை வகிக்கும். இது எதிர்கால உணவு உற்பத்திக்கு, மிகவும் நிலையான தானியமாக இருக்கும். எனவே, சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருன்றனர்.கடந்த, 2018-19ல், 48 ஆயிரத்து, 756 ஏக்கர், 2019-20ல், 64 ஆயிரத்து, 239 ஏக்கர், 2020-21ல், 55 ஆயிரத்து, 485 ஏக்கர், 2021-22ல், 59 ஆயிரத்து, 245 ஏக்கர், 2022-23ல், 53 ஆயிரத்து, 868 ஏக்கர், 2023-24ல், 54 ஆயிரத்து, 212 ஏக்கர் என படிப்படியாக சாகுபடி அளவு அதிகரித்து வருகிறது. அதில், 2020-21, 2021-22 ஆண்டுகளில் ஆற்று தண்ணீர், பருவ மழை கை கொடுத்ததால் மற்ற ஆண்டுகளை விட அதிக பரப்பில் சாகுபடி நடந்ததுள்ளது. 2024-25ம் ஆண்டு பருவ மழை, அமராவதி, காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதால், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சோளம் பயிரிடுவதன் வாயிலாக சோளத்தட்டு கிடைப்பதுடன், கால்நடைகளுக்கு தேவையான தீவனமும் கிடைக்கிறது என்பதால், சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி