மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 11,082 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு, 12,355 கன அடியாக அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 10,935 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,420 கன அடி தண்ணீரும் திறக்கப்-பட்டது. அமராவதி அணைதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 473 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வினாடிக்கு, 408 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 89 அடியாக இருந்தது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.51 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.