உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஐந்து ரோட்டில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்

ஐந்து ரோட்டில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்

கரூர், கரூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன், 100 டிகிரி அளவிற்கு வெயில் அடித்து வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், கரூர் ஐந்து ரோடு பகுதியில் பஸ் நிறுத்தத்திற்கான நிழற்கூடம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, முதியவர்கள் மற்றும் பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் பஸ்சுக்காக, பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் ஐந்து ரோடு பகுதியில் நிழற்கூடம் அமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ