ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த பாலராஜபுரத்தில், 40 முன்னோடி விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் உதவி வேளாண்மை இயக்குனர் புகழ்வேந்தன் தலைமை வகித்தார். புழுதேரி வேளாண்மை அறிவியல் நிலைய அலுவலர் தமிழ்செல்வி, விவசாயிகளுக்கு நெல் சாகுபடி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பாதுகாப்பு மற்றும் பூச்சி மேலாண்மை, களை நிர்வாகம், இயற்கை வேளாண்மை, பஞ்ச காவியா கரைசல், மீன் அமிலக்கரைசல், இஞ்சி பூண்டு கரைசல் குறித்து எடுத்துக்கூறப்பட்டது. மேலும், மத்திய அரசின் பி,எம். கிசான் பயன்பாடுகளை பற்றி உதவி அலுவலர் ரமேஷ் கூறினார்.கிருஷ்ணராயபுரம் ஆத்மா திட்ட மேலாளர் முரளிகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.