இரும்பு கதவு திருட்டு; இருவர் மீது வழக்கு
குளித்தலை: குளித்தலை, பெரியபாலம் சண்முகா நகரை சேர்ந்தவர் அன்னக்கிளி, 59. நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், இவரது வீட்டு இரும்பு கதவை இரண்டு பேர் திருடி சென்றனர். இதை பேரன் பிரவீனுக்கு அன்னக்கிளி தெரிவித்தார்.உடனே பேரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, திருடிய நபர்களை பிடித்து, இரும்பு கதவுடன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்த தருமன், 22, மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது. குளித்தலை போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.