மேலும் செய்திகள்
இளஞ்சிவப்பு ஆட்டோ கோட்டைக்கே வந்துட்டோமில்லே...!
25-Apr-2025
கரூர், கரூர் மாவட்ட, குழந்தைகள் நலன் சிறப்பு சேவைகள் துறை சார்பில், இளஞ்சிறார் நீதி குழுமம் சார்பில், குற்ற வழக்குகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.அதில், இளஞ்சிறார் தொடர்பான குற்ற வழக்குகளை நிலுவையில்லாமல் பணி செய்த, கரூர் மகளிர் போலீஸ் ஏட்டு சபீதா, பசுபதிபாளையம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஏட்டு ராதா ஆகியோருக்கு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மற்றும் இளாஞ்சிறார் நீதி குழும தலைவர் பரத் குமார் பாராட்டு தெரிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினார். அப்போது, நீதி குழும உறுப்பினர்கள் கனகராஜ், கலாவதி உடனிருந்தனர்
25-Apr-2025