உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கே.பேட்டை பஞ்., சாலையில் குவிந்துள்ள குப்பையால் நாற்றம்

கே.பேட்டை பஞ்., சாலையில் குவிந்துள்ள குப்பையால் நாற்றம்

குளித்தலை: குளித்தலை அடுத்த கே.பேட்டை பஞ்., வீரவள்ளி கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாச்சிபுரம், கே.பேட்டை பகுதியில் இருந்து பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில், வீரவள்ளி கிராம நெடுஞ்சாலையில் கொட்டப்படும் குப்பையை, பஞ்., நிர்வாகம் அகற்றாததால், மலைபோல் குவிந்து காணப்படுகிறது.இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ