உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குண்டும், குழியுமான கள்ளப்பள்ளி தெற்கு சாலை

குண்டும், குழியுமான கள்ளப்பள்ளி தெற்கு சாலை

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி தெற்கு சாலை குண்டும், குழி-யுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்., தெற்கு பகுதி கிராமத்திற்கு தார்ச்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக மக்கள் விளை நிலங்களுக்கு வாகனங்களில் செல்கின்றனர். மேலும் அறுவடை செய்யப்படும் வாழைத்தார், வெற்றிலை மூட்-டைகள் வாகனங்களில் எடுத்து சென்று வருகின்றனர். சாலை பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருப்-பதால், விவசாயிகள் அவஸ்தைக்கு ஆளாகின்றனர். மேலும், சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு குறுகிய நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் மக்கள் செல்லும் போது விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை புதுப்பிக்க, பஞ்., நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ