மேலும் செய்திகள்
புரட்டாசி சஷ்டியையொட்டிபுகழிமலை கோவிலில் வழிபாடு
29-Sep-2025
கரூர், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, முருகன் கோவில்களில் நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது.கரூர் மாவட்டம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கந்தசஷ்டி விழா முதல் நாளை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது பின், சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கந்தசஷ்டி விரதம் இருக்கும் முருக பக்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய்புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஐப்பசி மாத கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.* கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. ஆறுமுக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காப்பு கட்டுதல், சுவாமி உட்பிரகார புறப்பாடு நடந்தது. பின் லட்சார்ச்சனையுடன் தீபாராதனை காட்டப்பட்டது.கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா வரும், 27ல் நடக்கிறது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு கந்த சஷ்டி மகா அபிஷேகம், மாலை, 3.30 மணிக்கு சக்திவேல் வழங்குதல், 4.00 மணிக்கு கோவில் வளாகத்தில் நான்கு மாட வீதிகளில் சூரசம்ஹார விழா நடக்கிறது. 28 காலை, 10:30 மணி முதல், 11:30 மணிக்குள் வள்ளி-தெய்வானை உடனாகிய ஆறுமுக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண காட்சியுடன் திருவீதி உலா நடக்கிறது.
29-Sep-2025