உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு தேவை; சமூக நீதியே மக்கள் விடுதலை அமைப்பு மனு

கரூர் பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு தேவை; சமூக நீதியே மக்கள் விடுதலை அமைப்பு மனு

கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என, சமூக நீதியே மக்கள் விடுதலை அமைப்பினர் மனு அளித்தனர்.கடந்த வாரம், கரூர் பஸ் ஸ்டாண்டில், சேலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்த சுமதி என்பவர் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது போதை நபர் ஒருவர், சுமதியிடம் தகராறு செய்துள்ளார். தாமதமாக வந்த போலீசாரிடம், அவர் வாக்குவாதம் செய்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், சமூக நீதியே மக்கள் விடுதலை அமைப்பின் கொள்கை பரப்பு செயலர் தமிழ்மிகு பிச்சைவேல் தலைமையில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: எங்கள் அமைப்பின் பொருளாளர் சுமதி, (சேலம் நெடுஞ்சாலை நகர்), கரூர் பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது குடி போதையில் தகராறு செய்த நபர் குறித்து, அவரச உதவி, 100 எண்ணில் போன் செய்து, ஒரு மணி நேரம் கழித்து போலீசார் வந்தார். இந்த தகராறில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும். பஸ் ஸ்டாண்டை சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். போலீசார் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை